அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அறிவுறுத்தலுக்கு இணங்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கழக ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் நடைபெற்று வருகின்றன.
தஞ்சாவூர் மாநகர் மாவட்டத்தில் கழக செயல் வீரர்களின் கூட்டம் வள்ளத்தில் நடைபெற்றது. கழக துணை பொதுச்செயலாளர் திரு. எம். ரங்கசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கழக நிர்வாகிகளுக்கு தேர்தல் களப்பணி குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும் புதிய நிர்வாகிகள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் மாநகர மாவட்டம் மாணவர் அணிச் செயலாளர் திரு. பிரதீப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மதுரை மாநகர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில் தெப்பக்குளம் பகுதியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் பூத் கமிட்டி அமைப்பது குறித்து கழக நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட கழக செயலாளர் திரு. ஸார். ராஜலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கழக அம்மா பேரவை செயலாளர் திரு. மாரியப்பன் கேனடி கலந்துகொண்டு கழக நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். காஞ்சிபுரம் நகர கழகம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளர் மொளச்சூர் திரு. ஈரா பெருமாள் காஞ்சிபுரம் நகர கழக செயலாளர் திரு.மனோகரன் ஆகியோர் ஒன்றாவது வார்டுக்கு உட்பட்ட ஒலிமுகம்மது பேட்டை பகுதியில் கள உறுப்பினர் சேர்க்கை படிவங்களை பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு வழங்கி ஆலோசனைகளை வழங்கினர். இந்த நிகழ்ச்சில் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கடலூர் கிழக்கு மாவட்ட சார்பாக கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆடிட்டர் திரு. என். சுந்தரமூர்த்தி கடலூர் நகரத்திற்கு உட்பட்ட வார்டு கழகச் செயலாளர்களை நேரில் சந்தித்து உறுப்பினர் சேர்க்கைக்கான படிவங்களை வழங்கினார்.
கடலூர் நகர செயலாளர் திரு. வி. ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்றனர். வேலூர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் காட்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட கரிகிரி, காண்டிபெடு, சேர்க்காடு, எரந்தங்கள், ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்ததோடு உறுப்பினர் சேர்க்கைகான படிவமும் கழக நிர்வாகிகளிடம் வழங்கப்பட்டது. இதே போல் பெரிய மேட்டுர், சின்ன மேட்டுர், கொடுக்கன்தாங்கல், சோமநாதபுரம், கோட்டைநத்தம் உள்ளிட்ட பகுதிகளிலும் மாநகர மாவட்ட செயலாளர் காட்பாடி திரு. எ.எஸ் ராஜா ஆய்வுசெய்தார். வேலூர் மாநகர தொகுதிக்கு உட்பட்ட தோட்டப்பாளையம் சைதாப்பேட்டை வேலூர் மேற்கு பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கழக நிர்வாகிகள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் மாவட்ட நிர்வாகிகள் மாவட்டத் துணைச் செயலாளர் திரு. முரளிதரன் மாவட்ட பொருளாளர் திரு. அப்புப்பால் பாலாஜி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.