நிவர் புயல் கரையை கடக்கும் போது 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிவர் தீவிர புயலாக நாளை மறுநாள் மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரையைக் கடக்க உள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நிவர் புயல் தமிழகத்தை நோக்கி நகருகின்றது. புயல் கரையை கடக்கும்போது 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு இருக்கின்றது. சென்னையிலிருந்து 590 கிலோ மீட்டர், புதுச்சேரியிலிருந்து 550 கிலோ மீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உள்ளது.
மணிக்கு 25 கிலோ மீட்டர் வேகத்தில் சென்னையை நோக்கி வேகமாக வருகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம். வங்கக் கடலில் தீவிர புயலாக நாளை மறுநாள் கரையை கடக்கும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனிடையே புயலால் ஏற்படும் சேதங்களை குறைப்பது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.