தமிழகத்தில் மேலும் 1,655 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி நேற்று 1,655 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,69, 995 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் காரணமாக 19 பேர் உயிரிழந்தனர். இவர்களுடன் சேர்த்து தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 11,605-ஆக உயர்ந்தது.
சென்னையில் நேற்று ஒரே நாளில் 489 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இவர்களுடன் சேர்த்து சென்னையில் இதுவரை 2,12,14 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று மட்டும் 2010 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர். தமிழகத்தில் இதுவரை 7,45,248 பேர் குணமடைந்துள்ளனர்.