விமான நிலைய ஊழியருக்கு ஏற்பட்ட கொரோனா தொற்றால் ஓட்டுமொத்த பயணிகளையும் பரிசோதனைக்கு உட்படுத்தியது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் ஷாங்காய் சர்வதேச விமான நிலையத்தில் பணியாற்றிய ஊழியர் ஒருவருக்கு விமானநிலையத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ஒட்டுமொத்த பயணிகளும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதால் அங்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு உடை அணிந்த ஊழியர்கள் உடனடியாக பணியமர்த்தப்பட்டு பயணிகள் அனைவரையும் தரை தளத்திற்கு அழைத்துச் சென்ற காட்சிகள் காணொளியாக வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் அவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு கட்டாயப்படுத்தியதால் பயணிகள் தங்களை விடுவிக்குமாறு கூச்சலிட்டுள்ளனர். அதுமட்டுமின்றி அங்கிருந்து தப்பிக்க முயன்ற விமான பயணிகள் பலரையும் விமான நிலைய ஊழியர்கள் வலுக்கட்டாயமாக தடுத்து நிறுத்தியுள்ளனர்.