குஜராத்தில் கோர்வாட் கிராமத்தில் தண்ணீர் பஞ்சம் நிலவி வருவதாக அவ்வூர் பெண்கள் தெரிவித்துள்ளனர்.
கோடை வெயிலால் இந்தியாவில் பல மாவட்டடங்களில் தண்ணீர் பஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் கோர்வாட் கிராமத்தில் வறட்சி வேகமாக பரவிவருகிறது. இங்குள்ள பெண்கள் பகலில் வேலைக்கும், இரவில் தண்ணீரை தேடியும் அழைக்கின்றனர்.
இது குறித்து அந்த கிராம பெண்கள் கூறுகையில், ”பகலில் வேலைக்கு சென்று இரவு வீட்டுக்கு வரும் இந்த பெண்கள், வீட்டிற்கு வந்ததும் உடனே தண்ணீரை தேடி இரவு நேரத்தில் அழைகின்றனர். தண்ணீருக்காக சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது என்று இந்த கிராமத்து பெண்கள் தெரிவித்துள்ளனர்.