Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

அண்ணாச்சி பழ கீர்… மிக சுவையாக செய்வது எப்படி?

அண்ணாச்சி பழ கீர் செய்ய தேவையான பொருள்கள்:

அண்ணாச்சி பழம்         – அரை கப்
ரவை                                      – 100 கிராம்
சர்க்கரை                             – 150 கிராம்
குங்குமப்பூ                         – ஒரு சிட்டிகை
பால்                                       – அரை லிட்டர்
நெய்                                      – 2 டீஸ்பூன்
எண்ணெய்                         – 1 டீஸ்பூன்
முந்திரி, பாதாம்               – 5

செய்முறை:

முதலில் கடாயை அடுப்பில் வைத்து நெய் விட்டு, ரவையை சேர்த்து வறுத்து எடுக்கவும். பின் சூடான பாலில் குங்குமப்பூவை போட்டு நன்கு கரைத்து கொள்ளவும்.

அடுத்து அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பின் முந்திரியை சுடுதண்ணீரில் 10 நிமிடங்கள் ஊற வைத்து, தோல் உரித்த பருப்பை துருவி எடுத்து, அதனை ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் விட்டு வறுத்து கொள்ளவும்.

ஒரு வாணலியில் பாலை கொதிக்க விட்டு, அதனுடன் வறுத்த ரவையை சேர்த்து கிளறவும் அதன் பின் தேவையான சர்க்கரையை சேர்த்து பணம் வந்தவுடன் கரைத்து வைத்துள்ள குங்குமப்பூவை ஊற்றி, அத்துடன் சிறு துண்டுகளாக நறுக்கிய அன்னாசிப்பழத்தை சேர்த்து கிளறி, இறுதியில் வறுத்த முந்திரி, பாதாம் தூவி பரிமாறவும்.

Categories

Tech |