Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் ….!!

தர்மபுரி  மாவட்டம் ஒகேனக்கல் அருவிகளில் நீராடியும் படகு சவாரி செய்தும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ந்தனர்.

தமிழகத்தின் தலை சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகத் திகழும் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா மையத்தில் விடுமுறை நாளான நேற்று ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் குறிப்பாக கர்நாடகா புதுச்சேரியில் இருந்தும் அதிகளவில் பயணிகள் வருகை தந்தனர். ஒகேனக்கல் காவிரியில் சுமார் 10 ஆயிரம் கன அடி நீர் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது. குறைவான நீர் வரத்து இருந்ததால் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் அருவிகளில் நீராடியும் படகில் சவாரி செய்தும்  மகிழ்ந்தனர்.

ஐந்தருவி  சினிவால்ஸ் உட்பட அருவியின் இயற்கை காட்சிகளை கண்டு ரசித்தனர். சுற்றுலா பயணிகள் உணவுகளையும் சுவைத்தனர். கொரோனா தொற்றின் ஆபத்தினை உணராமல் சுற்றுலா பயணிகள் முகக்கவசம் இன்றியும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமழும் கூட்டம் கூட்டமாக சென்றதை  அங்கிருந்த அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளவில்லை.

Categories

Tech |