வடகத்துவையல் செய்ய தேவையான பொருட்கள்:
வடகம் – 3 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் – 8
உளுந்தம் பருப்பு – 2 டீஸ்பூன்
தேங்காய் துருவல் – ஒரு மூடி
செய்முறை:
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, வடகத்தை வறுத்து எடுக்கவும். பின் அதே வாணலியில் உளுந்தம் பருப்பை போட்டு சிவக்க வறுத்து எடுக்கவும்.
பின் அதே எண்ணெயில் மிளகாய் மற்றும் தேங்காய் துருவலை சேர்த்து வதக்கிக் கொள்ளவும். அதனை தொடர்ந்து, புளி, உப்பு மற்றும் வதக்கிய அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் கெட்டியாக அரைக்கவும். அதனை அம்மியில் அரைத்தால் சுவையாக இருக்கும்.
இதனுடன் தேவையானால் கறிவேப்பிலை மற்றும் மல்லித் தழையையும் சேர்த்து வதக்கி அரைத்துக் கொள்ளலாம். இப்போது சுவையான வடகத்துவையல் தயார்.