Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

டிக்கா சாப்பிடணுமா …கவலை வேண்டாம்…அப்போ இந்த ரெஸிபிய…ட்ரை பண்ணி பாருங்க..!!

காளான் டிக்கா செய்ய தேவையான பொருட்கள் :

குடை மிளகாய்             – 6 துண்டுகள்
வெங்காயம்                   – 4 துண்டுகள்
மிளகுத் தூள்                   – 1 தேக்கரண்டி
எண்ணெய்                        – தேவையான அளவு
உப்பு                                      – தேவையான அளவு
காளான்                               – 3
நீளமான டிக்கா ஸ்டிக் – 1
பச்சை மிளகாய்              – 2
பூண்டு                                  – சிறிதளவு

வறுப்பதற்கு :

சோம்பு                                 – 1 தேக்கரண்டி
வெந்தயம்                          – 1/2 தேக்கரண்டி
கடுகு                                     – 1 தேக்கரண்டி
தனியா                                – 1 தேக்கரண்டி

செய்முறை:

முதலில் குடைமிளகாயை சதுரமாகவும், வெங்காயத்தை வட்டமாகவும் வெட்டி எடுத்து கொள்ளவும். பூண்டு, பச்சை மிளகாய்  எடுத்து மிக்சிஜாரில் போட்டு விழுதாக அரைத்து எடுத்து கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் சோம்பு, வெந்தயம், கடுகு,தனியாவை சேர்த்து நன்கு வறுத்து எடுத்து சிறிது ஆற வைத்து,பின்பு மிக்சிஜாரில் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும்.

அதன் பின்பு வெங்காயத் துண்டுகளில் உப்பு, மிளகுத்தூள் போட்டு பிரட்டி வைக்கவும். மேலும் அடுப்பில் கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூண்டு, மிளகாய் விழுதை போட்டு, உப்பு சேர்த்து சிறிது மிளகுத்தூள் போட்டு வதக்கி கொள்ளவும்.

அதனையடுத்து அதில் வறுத்து அரைத்தபொடிகளை போட்டு நன்கு கிளறி, அதில் நறுக்கிய குடை மிளகாய், காளான் போட்டு கால் மணி நேரம் வதக்கவும்.

பிறகு  எண்ணெயில் வறுத்து எடுத்து அதை ஸ்டிக்கில்   குடை மிளகாய் துண்டு, வெங்காயத் துண்டு, காளான் என மாறி மாறி ஒவ்வொன்றாக எடுத்து சொருகி வைத்து  பரிமாறினால் சுவையான காளான் டிக்கா ரெடி.

Categories

Tech |