ஆந்திரா மாநிலத்தில் காதலித்து ஏமாற்றிய காதலன் திருமணத்தை, காதலி தடுத்த நிறுத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பெத்த பஞ்சானியை சேர்ந்த இளம்பெண், பெங்களூருவில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அவரும், அதே நிறுவனத்தில் பணிபுரியும் மீதகுரப்பள்ளியை சேர்ந்த கணேஷ் என்பவரும் 6 வருடங்களாக காதலித்து வந்தனர்.
இதனை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்துக்கொள்ள முடிவெடித்து பெற்றோர்களிடமும் தெரிவித்தனர். இந்நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன் கணேஷ் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு சொந்த கிராமத்திற்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில், கணேஷிற்கு அதே பகுதியை சேர்ந்த வேறு ஒரு பெண்ணுடன் கடந்த 2 நாட்களுக்கு முன் பெற்றோர்கள் முன்னில்லையில் திருமணம் நடக்க இருந்தது. இதனை அறிந்த அவரது காதலி, திருமணத்தை நிறுத்த அவசரமாக புறப்பட்டு சென்றுள்ளார். ஆனால் காதலி செல்வதற்கு கணேஷ் திருமணம் முடிந்துவிட்டது.
இதனால் மனமுடைந்த காதலி, கணேஷிடம் முறையிட முயற்சி செய்த நிலையில், அவரது உறவினர்கள் இளம்பெண்ணை தாக்கியுள்ளனர். இதையறிந்த கணேஷ், தனது மனைவியுடன் காதலி வருவதற்குள் ஓட்டம் பிடித்துள்ளார்.
இதனால் விரக்தி அடைந்த இளம்பெண், காதலன் மீதும், தாக்குதல் நடத்தியவர்கள் மீதும் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.