இஞ்சி துவையல் செய்ய தேவையான பொருட்கள்:
இஞ்சி – ஒரு விரல் அளவு
உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன்
மிளகாய் – 1 வடகம் – ஒரு டீஸ்பூன்
புளி – தேவைக்கேற்ப
செய்முறை:
முதலில் இஞ்சியை தோல் சீவி கழுவி தேவைக்கேற்ப அறிந்து கொள்ள வேண்டும். பின்பு வாணலியில் எண்ணெய் விட்டு, அதில் வரமிளகாய், உளுந்தம்பருப்பு, வடகம் ஆகியவற்றை தனித்தனியாய் வறுத்து எடுக்கவும்.
பின்பு மிக்ஸி ஜாரில் வறுத்த உளுந்தம்பருப்பு, வடகம், பச்சை மிளகாய், இஞ்சி, புளி மற்றும் உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பின்பு வாணலியில் சிறிதளவு எண்ணெயை ஊற்றி துவையலை போட்டு நன்றாக வதக்கி எடுத்தால், சுவையான இஞ்சி துவையல் ரெடி.