நடிகை பிரியா ஆனந்த் நடித்துள்ள ஹிந்தி வெப்சீரிஸ் தொடரின் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் .
தமிழ் திரையுலகில் நடிகை பிரியா ஆனந்த் ‘வாமனன்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த ஆதித்ய வர்மா, எல்கேஜி ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது நடிகை பிரியா ஆனந்த் ஹிந்தி வெப்சீரிஸ் ஒன்றில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்த வெப்சீரிஸ் தொடரின் புகைப்படங்களை பிரியா ஆனந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ரூ .2000 நோட்டுகளை மாலையாக அணிந்து அமர்ந்திருக்கும் ப்ரியா ஆனந்தின் புகைப்படம் வைரலாகி வருகிறது.