நாளை மறுநாள் நிபர் புயல் கரையைக் கடப்பதால் பல்வேறு விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக 7 மாவட்டத்தில் பேருந்து போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. புயல் தடுப்பு பணிகள் குறித்த ஆலோசனையை முதலமைச்சர் இன்று நடத்திய பிறகு இதற்கான உத்தரவை பிறப்பித்தார். இந்நிலையில் தற்போது ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிபர் புயல் காரணமாக ரத்து செய்யப்பட்ட ரயிலுக்கான கட்டணம் 15 நாட்களுக்குள் திருப்பி வழங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இணைய வழியில் டிக்கெட் முன்பதிவு செய்தோருக்கு கட்டணம் வங்கி கணக்கில் செலுத்தப்படும். மேலும் பராமரிப்பு பணி நடைபெறுவதால் நவம்பர் 24, 25-ம் தேதிகளில் சென்னை சென்ட்ரல் – கூடூர் ரயில் மார்க்கத்தில் புறநகர் சிறப்பு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.