Categories
மாநில செய்திகள்

நெருங்கியது நிவர் புயல்… மக்களுக்கு கடும் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் நிவர் புயல் சென்னையை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருப்பதால் பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப் பெற்ற பின்னர் தீவிர புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 420 கிமீ தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கில் 360 கிமீ தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது.

மேலும் கடந்த ஆறு மணி நேரமாக 11 கிமீ வேகத்தில் நிவர் புயல் நகர்ந்து கொண்டிருக்கிறது. அதனால் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |