மால்டா (மேற்கு வங்கம்): கங்கை நதிக்குள் விழுந்த லாரிகளை தேடும் பணியை அலுவலர்கள் முடுக்கி விட்டுள்ளனர். இந்த விபத்தில் மாயமான 7-8 பேரின் கதி என்ன ஆனது? என இதுவரை எந்தத் தகவலும் இல்லை.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து சரக்கு கப்பலில் ஏற்றி கொண்டு செல்லப்பட்ட லாரிகள் மேற்கு வங்க மாநிலம் மால்டா மணிசக் பகுதியில் கங்கை நதிக்குள் விழுந்தன. இந்த விபத்தில் 7-8 பேர் மாயமானார்கள். அவர்களை தேடும் பணியில் பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
தற்போதுவரை அவர்கள் குறித்த எந்தத் விபரமும் கிடைக்கவில்லை. இந்த விபத்து திங்கள்கிழமை (நவ.23) மாலை 7 மணிக்கு நடந்துள்ளது. சம்பவம் குறித்து அறிந்ததும் மாவட்ட ஆட்சியர் ராஜாஸி மித்ரா அங்கு சென்று மீட்புப் பணிகளை பார்வையிட்டார்.
மாயமானவர்களை தேடும் பணியில் பேரிடர் மீட்புக் குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றனர்.