புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்களுக்கு அவசரகால தொலைபேசி எண் வழங்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து தீவிர நிவர் புயலாக மாறியுள்ளது. அதனால் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செங்கல்பட்டு, சென்னை மட்டும் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்து கொண்டிருக்கும் நிலையில், 24 மணி நேர புயல் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர்கள் உதவி எண்களை அறிவித்துள்ளனர்.
அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்திற்கு 044-27427412, 27427414, கடலூரில் 1077,04142-220700, 233933, 221383, 221113 ஆகிய அவசரகால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.