கொரோனாவுக்கு எதிராக நோய் எதிர்ப்பு ஆற்றலை பெற மாணவர்கள் என்னென்ன சாப்பிட வேண்டும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா பரவல் குறைந்துள்ள பகுதிகளில் பள்ளிக்கூடங்கள் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவர்களில் 60-70% பேருக்கு நோய் எதிர்ப்பு ஆற்றல் வலுவான நிலையில் உள்ளதாகவும், இதனால் மாணவர்களுக்கு தொற்றுதலுக்கு ஆளாக கூடிய நிலை குறைவாக உள்ளதாகவும் இலங்கையின் சுகாதார அமைச்சகத்துடன் தொடர்புடைய முதன்மை பராமரிப்பு சேவைகள் இயக்குனர் பிரியந்த அத்தபத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், “மாணவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சிவப்பு அரிசி சோறு, பச்சை இலை வகைகள், காய்கறிகள் மற்றும் மீன் ஆகியவற்றை உண்பது அவசியம். பழங்கள் விட்டமின் சி,டி அடங்கிய உணவுகள் மற்றும் காலை 7 மணி முதல் 10 மணிக்குள் சூரிய ஒளியை பெறுதல் நல்லது என்று மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். மேலும் பயறுவகைகள், கிழங்கு வகைகள் போன்ற உணவு வகைகளை மாணவர்கள் உட்கொள்ளவேண்டும். சுகாதாரமான கொதிக்க வைத்து வடிகட்டிய தண்ணீர் குடிப்பது நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும்” என்று அவர் கூறியுள்ளார்.