Categories
மாநில செய்திகள்

மீண்டும் மருத்துவ கலந்தாய்வு… முதல்வருக்கு ஸ்டாலின் கடிதம்… காரணம் என்ன?…!!!

தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு மீண்டும் நடத்தப்பட வேண்டும் என ஸ்டாலின் முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவப் படிப்பை அரசே முழுமையாக ஏற்றுக்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் மாணவர்கள் அனைவரும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வாய்ப்பு இருந்தும் பணம் இல்லாமல் மருத்துவ படிப்பை தவறிவிட்ட மாணவிகள் தர்ஷினி மற்றும் இலக்கியா ஆகியோர் அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினை சந்தித்து குறைகளை கூறினர்.

மேலும் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் என்ற அறிவிப்பும் முன்னரே வந்திருந்தால் மருத்துவப் படிப்பில் சேர்ந்து இருப்போம் என்றனர். இதுபோன்ற மாணவ மாணவிகள்அனைவருக்கும் உதவிடும் வகையில் மீண்டும் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Categories

Tech |