Categories
உலக செய்திகள்

“52 நாட்கள் சுரங்க அறையில்” 7 வயது சிறுவனை சீரழித்த 26 வயது வாலிபர்…. திகில் நிறைந்த சம்பவம்…!!

சிறுவனை கடத்தி சுரங்க அறையில் வைத்து சீரழித்த இளைஞர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரஷ்யாவில் 7 வயது சிறுவன் ஒருவர் பள்ளிக்கூடத்திற்கு சென்று வீட்டிற்கு திரும்பிய போது இளைஞர் ஒருவரால் வலுக்கட்டாயமாக கடத்தப்பட்டுள்ளார். இந்நிலையில் தலைநகர் மாஸ்கோவில் அமைந்துள்ள பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் ரகசிய அறையில் அவல நிலையிலிருந்து சிறுவனை காவல்துறையினர் மீட்டுள்ளனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய இளைஞர் dimithri kopilov(26) என்பவரை கைது செய்துள்ளனர். இவர் தமது வீட்டில் அமைக்கப்பட்டுள்ள ரகசிய சுரங்க அறையில் 7 வயது சிறுவனை சிறைவைத்து சீரழித்துள்ளார்.

மேலும் நீண்ட நாட்கள் சிறையில் வைத்த அந்த சிறுவனை மூளைச்சலவையும் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிறுவனை மீட்க காவல்துறையினர் சுரங்க அறைக்குள் சென்ற போது சிறுவன் வாய்விட்டு சிரித்ததாகவும், அதன்பின்னர் கண்ணீர்விட்டு கதறியதாகவும் கூறப்படுகிறது. சிறுவன் கடத்தப்பட்ட பிறகு பல தினங்கள் கடந்த நிலையிலும் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் திணறி உள்ளனர்.

இந்நிலையில் dimithri சிறுவனுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவம் தொடர்பாக ரகசிய இணையதளம் ஒன்றில் சிறார் ஈர்ப்பாளர்கள் உடன் பேசியது மட்டுமல்லாமல் காணொளி உரையாடல்களிலும் சிறுவனை ஈடுபடுத்தியுள்ளார். இந்த சிறார் ஈர்ப்பாளர்களின் நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணித்து வந்த அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் ரஷ்யா காவல்துறையிடம் இது குறித்து பகிர்ந்துள்ளனர். இந்நிலையில் இந்த தகவல் குற்றவாளியை அடையாளம் காணவும், சிறுவனை சிறை வைத்திருக்கும் இடத்தை தெரிந்து கொள்வதற்கு உதவியாக அமைந்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் அவரின் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து சிறுவனை மீட்டுள்ளனர்.

இரும்புக் கதவு மற்றும் ஜன்னல்கள் கொண்ட அந்த சுரங்கப்பாதை சத்தம் எதுவும் வெளியே கேட்காத வகையில் கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளது. இதையடுத்து சிறுவனை மீட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், சிறுவனின் பெற்றோரை வரவழைத்து சிறுவனை ஒப்படைத்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் சிறுவன் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளதால் உளவியல் சிகிச்சை தொடர்ந்து அளித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |