Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புயல் தீவிரம்… 4 மாவட்டங்களில்… அதீத கனமழை… எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் புயல் காரணமாக 4 மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது புயலாக மாறியுள்ளது. அது வருகின்ற 25 ஆம் தேதி மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக அதீத கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மேலும் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர மற்ற தேவைகளுக்காக பயணங்கள் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |