கூகுளின் நேஷனல் க்ரஷ் ஆப் இந்தியாவாகிய ராஷ்மிகா மந்தனா ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
நடிகை ராஷ்மிகா மந்தனா ‘கிரிக் பார்ட்டி’ என்ற கன்னட திரைப்படத்தின் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். பின் இவர் தெலுங்கில் விஜய் தேவர்கொண்டாவுடன் நடித்த’ கீதாகோவிந்தம்’ திரைப்படம் மூலம் பிரபலமடைந்தார். தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகனாக மகேஷ்பாபுவுடன் இவர் நடித்த ‘சரிலேரு நீகெவ்வரு’ திரைப்படம் ஹிட்டானது . இந்நிலையில் இந்த ஆண்டு கூகுளில் அதிகமாக தேடப்பட்ட நடிகையாக ராஷ்மிகா பெயர் தேர்வாகியுள்ளது . இதனால் கூகுள் அவரை நேஷனல் க்ரஷ் ஆப் இந்தியாவாக்கியிருக்கிறது.
அதாவது கூகுளில் நேஷனல் க்ரஷ் ஆப் இந்தியா என டைப் செய்தால் நடிகை ராஷ்மிகாவின் பெயர் காண்பிக்கப்படும். முன்னணி கதாநாயகிகளை பின்னுக்குத்தள்ளி முதலிடத்தை பிடித்த ராஷ்மிகாவிற்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து சமூக வலைத்தளங்களில் நேஷனல் க்ரஷ் ராஷ்மிகா என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. இதனை நடிகை ராஷ்மிகா மந்தனா உண்மையிலேயே ரசிகர்கள் மிகச்சிறந்தவர்கள் அவர்கள் அனைவருக்கும் என் அன்பு என்று கூறி பதிவிட்டுள்ளார்.
Woahhhhh!! My people are truly LEGENDARY!! They are so cute.. aren’t they?🤗 They have all my heart. ❤️ pic.twitter.com/2TXrtN0vI6
— Rashmika Mandanna (@iamRashmika) November 22, 2020