சி ஏ தேர்வுகள் நிவர் புயல் காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், காஞ்சிபுரம், காரைக்கால், கும்பகோணம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருவள்ளூர், விழுப்புரம், மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் இன்று மற்றும் நாளை நடைபெற இருந்த இந்த தேர்வுகள் டிசம்பர் மாதத்திற்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது. நாளை நடைபெறக்கூடிய தேர்வுகள் வரக்கூடிய டிசம்பர் மாதம் 9-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. தற்போது இருக்க கூடிய ஹால் டிக்கெட்டை வைத்து டிசம்பர் மாதம் தேர்வு எழுதிக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories