கண்பார்வை இல்லாதவர்களுக்கு உதவும் வகையில் கூகுள் நிறுவனம் புதிய தொழில்நுட்பம் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை புதிதாக அறிமுகம் செய்வதில் கூகுள் நிறுவனம் முன்னிலையில் இருக்கின்றது. இந்த வரிசையில் தற்போது கண்பார்வை இல்லாதவர்களுக்காக புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஒன்றினை அறிமுகம் செய்ய இருக்கின்றது. பொதுவாக கண்பார்வை இல்லாதவர்கள் ஒரு இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு நடந்து செல்வதற்கு மிகவும் சிரமப்படுவார்கள். ஆனால் இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் அவர்கள் சுயமாகவே ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு ஓடி செல்லக்கூடியதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஹத்தோன் நிகழ்வு ஒன்றில் லாப நோக்கமற்ற நிறுவனத்தின் அதிகாரி தோமஸ் பனிக் கண் பார்வை இல்லாதவர்களுக்கு உதவும் வகையில் தொழில்நுட்பம் ஒன்றினை அறிமுகம் செய்யுமாறு கூகுள் நிறுவன பொறியாளர்களிடம் கேட்டுள்ளார். அதற்கிணங்க இந்த சாதனமானது உருவாக்கப்பட்டுள்ளது என்று என்பது குறிப்பிடத்தக்கது.