பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை உடனே விடுதலை செய்ய வேண்டும் என திமுக தலைவர் முக.ஸ்டாலின் தமிழக ஆளுநரை சந்திக்கின்றார்.
தமிழகத்தில் 7 பேர் விடுதலை ஆனது மிக முக்கியமான ஒரு கட்டத்தை எட்டியிருக்கிறது. அவர்கள் எப்போது விடுதலை செய்யப்படுவார்கள் ? என்ற ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. ஏனென்று கேட்டால் தமிழக அரசு ஏற்கனவே ஒருமனதாக அனைத்து கட்சிகளோடு சேர்ந்து தீர்மானம் நிறைவேற்றியது. கடந்த 2018 நவம்பர் மாதத்தில் தீர்மானம் இயற்றி ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் முழுவதுமாக நிறைந்த சூழ்நிலையில் ஆளுநராக எந்த ஒரு முடிவு எடுக்காததால் அவர்கள் விடுதலை செய்யப்படுவது தொடர்ந்து கால தாமதமாகி வருகிறது.
இந்த சூழ்நிலையில் பேரறிவாளன் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று அவரது தாயார் பல்வேறு சமூக ஆர்வலர்களிடம் வலியுறுத்தி வந்தார். தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து கட்சிகளின் நிலைப்பாடாக இருப்பது 7 பேரின் விடுதலை. ஆயுள் தண்டனையே அதிகபட்சமாக 14 ஆண்டுகள் தான். ஆனால் இவர்கள் தொடர்ச்சியாக 32 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்து வருகின்றார்கள்.
இந்நிலையில் தான் திமுக தலைவர் மு க ஸ்டாலின் பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரின் விடுதலைக்கான நடவடிக்கையில் ஆளுநர் உடனே இறங்க வேண்டும் என்று வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் திமுகவின் மூத்த தலைவர்கள் துரைமுருகன், பொன்முடி, டிகேஎஸ் இளங்கோவன், ஆர் எஸ் பாரதி, தயாநிதிமாறன் ஆகியோரும் ஸ்டாலினுடன் ஆளுநரை சந்திக்கின்றனர்.