நிவர் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
சென்னையில் தண்ணீர்தேவை பூர்த்தி செய்யும் நீர் தேக்கங்கள் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளன. அம்மாவட்டத்தில் பெய்துவரும் மழை காரணமாக நீர் தேக்கங்களில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. மதுரவாயல், பூந்தமல்லி, போரூர், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
இதனால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்பதால் செம்பரம்பாக்கம் பூண்டி ஏரிகள் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என மத்திய ஜால் சக்தி துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.