சென்னையில் இருந்து 450 கிலோ மீட்டர், புதுச்சேரியிலிருந்து 410 கிலோ மீட்டர் தொலைவிலேயே கடந்த மூன்று மணி நேரமாக நிவர் புயல் நகராமல் மையம் கொண்டுள்ளது.
நிவர் புயல் நேற்றைய தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருந்த நிலையில் இன்று காலை புயல் உருவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இப்பொழுது வானிலை ஆய்வு மையம் தரப்பில் இருந்து வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த மூன்று மணி நேரமாக இந்த ”நிபர்” புயல் நகராமல் அப்படியே இருக்கிறது. முன்னதாக புதுச்சேரியிலிருந்து 410 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 450 கிலோ மீட்டர் தொலைவிலும் தென்கிழக்கு திசையில் மையம் கொண்டிருந்தது. மணிக்கு ஐந்து கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக சொல்லப்பட்டது. அதனால் தற்போது நகராமல் அதே இடத்தில் மையம் கொண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனால் இதனுடைய வேகம் அதிகரிக்கும் என்று சொல்லப்பட்டிருக்கின்றது. இன்று இரவு வரைக்கும் கொஞ்சமாக நகரும் அல்லது நகராமல் இருக்கும். அதனை தொடர்ந்து இதன் தீவிரத் தன்மை அதிகமாகி இன்று இரவு தீவிர புயலாக வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் தீவிர புயலாக நாளை இரவு கரையை கரையை கடக்க கூடும் என்றுதான் சொல்லப்படுகிறது. தீவிர புயலாக கரையை கடக்கும் பட்சத்தில் 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பிருக்கிறது.