புழுங்கல் அரிசி – 1 1/2 கப் காய்ந்த மிளகாய் – 2
பெ.வெங்காயம் – 2
கேரட் – 1
வெண்டைக்காய் – 100 கிராம்
கடுகு, சீரகம் – ஒரு டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிதளவு தழை
செய்முறை:
முதலில் கேரட்டை துருவிக் கொள்ளவும். பின் வெண்டைக்காய், வெங்காயம், கொத்தமல்லி என மூன்றையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
புழுங்கல் அரிசியை, ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து, பின்பு அதனுடன் காய்ந்த மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து மிருதுவாக அரைத்து எடுக்கவும்.
அடுத்து ஓரளவு அரைபட்டதும், அதனுடன் வெண்டைக்காயை சேர்த்து நைசாக அரைத்து புளிக்க விடவும். பின் மாவு புளித்தவுடன், அதில் கடுகு, சீரகத்தை சேர்த்து தாளித்து இதனுடன் சேர்த்துக் கொள்ளவும்.
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து, எண்ணெய் தடவி, சூடானதும் மாவை ஊற்றவும். பின் அதனுடன் வெங்காயம், கேரட், கொத்தமல்லி தழையை தூவி தோசைகளாக சுட்டெடுத்தால் சுவையான வெண்டைக்காய் கேரட் தோசை ரெடி.