Categories
சினிமா தமிழ் சினிமா

சுவாரஸ்யமாக வெளியான முதல் புரோமோ… கால் சென்டராக மாறிய பிக்பாஸ் வீடு…!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரோமோ வெளியாகியுள்ளது .

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 50 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்று வெளியான முதல் புரோமோவில் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கு கால் சென்டர் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் பாலாஜி, ரமேஷ், ஆஜித், கேபி, சம்யுக்தா ஆகியோர் கால் சென்டர் ஊழியர்களாக உள்ளனர்.

மேலும் கன்பெக்சன் ரூமிலிருந்து அர்ச்சனா கால்சென்டர் ஊழியரான பாலாஜியிடம், யாரை நான் முன்னிறுத்தி விளையாடுகிறேன் என நேரடியாக கேள்வி கேட்கிறார். இதற்கு பாலாஜி வெளிப்படையாகவே சோம், ரியோ மற்றும் கேபி என பதில் கூறுகிறார். இவர்களின் உரையாடல் மற்ற போட்டியாளர்களுக்கு லிவிங் ஏரியாவில் உள்ள டிவியில் ஒளிபரப்பாகிறது . இப்படி சுவாரஸ்யமாக  வெளியான  முதல் புரோமோவால் இன்றைய எபிசோடை காண பிக்பாஸ் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

Categories

Tech |