புயல் கரையை கடக்கும் வரையில் மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் எனவும் கடைகளை திறக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது தாழ்வு மண்டலமாக உருவாகி தீவிர புயலாக மாறியுள்ளது. அதனால் பொதுமக்கள் அனைவருக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் நிவர் புயல் நாளை நண்பகல் கரையைக் கடக்கும் என அளிக்கப்பட்டுள்ள நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒரு மணி நேரத்திற்கு 5 கிமீ வேகத்தில் நகர்வதால் நாளை மாலைதான் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதனையடுத்து புயல் கரையை கடக்கும் வரை விழுப்புரத்தில் கடைகளை திறக்க வேண்டாம் எனவும் மக்கள் எவரும் வீடுகளிலிருந்து வெளியே வரவேண்டாம் எனவும் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை அறிவுறுத்தி உள்ளார்.