நிவர் புயல் என்பது நாளை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் அது தொடர்பான அறிக்கையை நேற்று முதலமைச்சர் வெளியிட்டார்.
இதில் மிக முக்கிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய 7 மாவட்டங்களில் மாவட்டங்களுக்கு இடையேயும் மாவட்டங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் 24 11 2020 அதாவது இன்று மதியம் ஒரு மணி முதல் மறு உத்தரவு வரும் வரை பேருந்து போக்குவரத்து நிறுத்தி வைக்கப்படுவதாக தற்போது தமிழக முதலமைச்சர் தெரிவித்திருந்தார். அதை தொடர்ந்து தற்போது பேருந்து சேவை அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.