தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலை நிவர் புயலாக உருவானது. இதையடுத்து சென்னை மற்றும் புதுச்சேரியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் அதை தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறியது. நேற்று காலை 5:30 மணிக்கு இது புயலாக உருவெடுத்தது. சென்னைக்கு அருகே 450 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள நிவர் புயல் நாளை மாலை மாமல்லபுரம் காரைக்கால் இடையே கரையை கடக்கும் என்றும் அப்போது மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நிவர் புயல் உருவானதை தொடர்ந்து சென்னை மற்றும் புதுச்சேரியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.