புயல் காரணமாக கடலுக்குச் சென்ற 30 மீனவர்களை காணவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தாழ்வு மண்டலமாக உருவாக்கி புயலாக மாறியுள்ளது. அது மூன்று மணி நேரமாக வங்கக்கடலில் ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ளது. இந்நிலையில் காரைக்காலில் இருந்து கடலுக்கு சென்ற 30 மீனவர்களை காணவில்லை என்றும், கடலோர காவல்படை தேடி வருவதாகவும் அமைச்சர் சாஜகான் தெரிவித்துள்ளார்.
மேலும் சென்னை தாம்பரம் அருகே வீட்டின் மதில் சுவரில் சாய்ந்து நின்ற கௌசல்யா மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். மழை காரணமாக சுவரில் மின்கசிவு பாய்ந்து இருக்கக்கூடும் என்று கூறப்படுகின்றது.