நிவர் புயல் கரையை கடக்க இருக்கும் நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இதுகுறித்தன தகவல்களை உடனுக்குடன் தெரிவித்து வருகின்றது. அந்த வகையில், திருவண்ணாமலை, புதுச்சேரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், காரைக்காலில் நாளை அதிக கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், தஞ்சை, திருவாரூர், புதுச்சேரி, பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மேலும் மயிலாடுதுறை, நாகை, புதுச்சேரி, காரைக்காலில் 100 கிலோ மீட்டர் முதல் 110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் காற்று வீச வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.