வாங்க கடலில் நிலைகொண்டிருக்கும் நிவர் புயல் சின்னம் விரைவில் புயலாக மாறி இருப்பதால் டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தனுஷ்கோடி முதல் சென்னை மெரினா கடற்கரை வரை கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது.
தென் மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் அதைத்தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. நேற்று இது புயலாக வலுபெறுகிறது. விரைவில் நிவர் புயல் உருவாகும் என்பதால் அதற்கு முன்னோட்டமாக கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. டெல்ட்டா மாவட்டங்களிலும் சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களிலும் இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.
நேற்றும் நாளையும் வட கடலோர மாவட்டங்களில் மணிக்கு சுமார் 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது . புயல் கரையை கடக்கும் வேளையில் இந்த வேகம் 120 கிலோ மீட்டர் அளவுக்கு இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிவர் புயல் காரணமாக தமிழகத்தின் பல இடங்களில் 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.