Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

கடல் கொந்தளிக்கும்…. 2மீட்டருக்கு அலை உயரும் … 110கி.மீ வேகத்துல காற்று… ”நிபர்” வருது அலர்ட் …!!

வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தற்பொழுது ”நிவர்” புயல் தென் மேற்கு வங்க கடல் பகுதியில் புதுச்சேரிக்கு கிழக்கு தென்கிழக்கு திசையில் 410 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 450 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. தற்பொழுது அதன் நகரும் வேகம் குறைந்துள்ளது. இது அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தொடர்ந்து தீவிர புயலாக வலுப்பெற கூடும்.

இது வடமேற்கு திசையில் நகர்ந்து காரைக்கால் மற்றும் மாமல்லபுரத்துக்கு இடையே புதுச்சேரிக்கு அருகில் நாளை மாலை தீவிர புயலாக கரையை கடக்க கூடும். இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் வரும் 27-ஆம் தேதி வரை மழை தொடரும். அடுத்து வரும் 24 மணி நேரத்தில் கடலோரப் பகுதிகளில் பெரும்பான்மையான இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை 25ஆம் தேதி கடலோரப் பகுதிகளில் பரவலாகவும்,  உள் மாவட்டங்களில் பெரும்பான்மையான இடங்களில் மழை பெய்யக்கூடும். கனமழையை பொருத்தவரை அடுத்து வரும் 24 மணி நேரத்தில் காரைக்கால், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிக கன மழையும்,  திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை – மிக கனமழை பெய்யக்கூடும்.

நாளை 25ஆம் தேதி புதுவை, கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிக கனமழையும், ஏனைய வட தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

பலத்த காற்றை பொறுத்தவரை வரை நாகப்பட்டினம், காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், புதுவை, விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மணிக்கு 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்திலும்,  சமயங்களில் 120 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசும். திருவாரூர், காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வரையிலும் சமயங்களில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் நாளை முற்பகல் முதல் இரவு வரை பலத்த காற்று வீசக்கூடும்.

கடல் நிலையைப் பொறுத்த வரையிலும், நாளை இரவு வரை தமிழக கடல் பகுதியை உள்ள கடல்  கொந்தளிப்புடன் காணப்படும். கடல் அலைகள் இயல்பை விட இரண்டு மீட்டர் உயரம் வரை உயரக்கூடும். எனவே மீனவர்கள் நாளை வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரை மழை தொடரும். அடுத்து வரும் 2 தினங்களுக்கு சில பகுதிகளில் கன முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |