Categories
மாநில செய்திகள்

அதிதீவிர புயலின் போது…. எச்சரிக்கை கூண்டுகள்… ஏற்றப்படுவதற்கான அர்த்தம் இது தான்…?

புயல் காலங்களில் ஏற்றப்படும் எச்சரிக்கை கூண்டுகளுக்கு என்ன அர்த்தம் என்று கொடுக்கப்பட்டுள்ளது.

புயல் ஏற்படும் காலங்களில் கடலோரப் பகுதிகளில் உள்ள துறைமுகங்களில் எச்சரிக்கை செய்யும் விதமாக புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படுகிறது. இது புயல், காற்று வீசும் திசை, புயல் கரையை கடக்கும் போன்ற பல விஷயங்களை உணர்த்தும் வண்ணம் 1 முதல் 11 வரை கூண்டுகள் ஏற்றப்படுகின்றன. இதற்கான அர்த்தம் என்னவென்று இப்போது தெரிந்து கொள்ளலாம்.

1-ம் எண் கூண்டு:

புயல் உருவாகக்கூடிய வானிலை சூழல் தற்போது உருவாகியுள்ளது என்று அர்த்தம். இதனால் துறைமுகம் ஏதும் பாதிக்கப்படுவதில்லை. ஆனால் சற்று பலமாக காற்று வீசியது என்று பொருள்.

2-ம் எண் கூண்டு:

புயல் உருவாகியுள்ளது என்பதை எச்சரிப்பதற்காக ஏற்றப்படுகிறது. இந்த எச்சரிக்கையை கண்டால் துறைமுகத்தில் இருந்து கப்பல்கள் வெளியேற வேண்டும்.

3-ம் எண் கூண்டு:

திடீர் காற்றுடன் மழை பெய்யக்கூடிய வானிலையால் துறைமுகம் அச்சுறுத்தப்பட்டுள்ளது என்று பொருள்.

4-ம் எண் கூண்டு :

துறைமுகத்தில் உள்ள கப்பல்களுக்கு ஆபத்து. மூன்று முதல் நான்கு எண் கூண்டுகள் துறைமுகத்தில் மோசமான வானிலை நிலவுவதாக தெரியப்படுத்துகின்றன.

5-ம் எண் கூண்டு:

புயல் உருவாகியிருப்பதை குறிக்கிறது. அத்தோடு துறைமுகத்தின் இடதுபக்கமாக புயல் கடக்கும் என்பதற்கான எச்சரிக்கை ஆகும்.

6-ம் எண் கூண்டு:

துறைமுகத்தில் புயல் வலது பக்கமாக கரையைக் கடந்து செல்லும். இந்த நேரத்தில் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும் என்று பொருள்.

7-ம் எண் கூண்டு:

துறைமுகம் வழியாகவோ அல்லது அருகிலோ புயல் கரையைக் கடக்கலாம். 5,6 மற்றும் 7 எச்சரிக்கை கூண்டு துறைமுகத்துக்கு ஏற்றப்பட்ட அபாயத்தை குறிக்கும்.

8-ம் எண் கூண்டு:

மிகுந்த அபாயம் என்பது பொருள். தீவிர புயலாகவோ, அதிதீவிர புயலாகவோ உருவாகியுள்ளது என்று பொருள்.

9-ம் எண் கூண்டு:

தீவிர புயலாக உருவெடுத்து உள்ளது என்று பொருள். அது துறைமுகத்தை புயல் வலது பக்கமாக  என்பது பொருள்.

10-எண் கூண்டு:

தீவிர புயலாக உருவெடுத்து உள்ளது என்று பொருள். அது துறைமுகம் அல்லது அதன் கரஓ அருகே கடந்து செல்லும் பெரிய அபாயம் ஏற்பட்டிருப்பதாக அர்த்தம்.

11-ம் எண் கூண்டு:

இந்த எச்சரிக்கைதான் உச்சபட்சமானது. இந்த கூண்டு ஏற்றப்படுகிறது என்றால் வானிலை எச்சரிக்கை மையத்துடனான தகவல் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது என்று பொருள்.

Categories

Tech |