தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு 832 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 38,000 ரூபாய்க்கும் கீழ் சென்றது.
ஆபரணத் தங்கம் விலை கிராம்க்கு 104 ரூபாய் குறைந்து சவரனுக்கு 732 ரூபாய் சரிந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4,644 ரூபாய்க்கும் ஒரு சவரன் 37,152 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் 8 கிராம் 40,192 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி ஒரு கிராம் 64 ரூபாய் 50 காசுக்கும் ஒரு கிலோ 64,500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.