பிரபல நடிகர் ராணா தனக்கிருந்த உடல்நல பாதிப்பு குறித்து உருக்கமாக பேசியுள்ளார்.
தெலுங்கு திரையுலகில் ‘லீடர்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் ராணா டகுபதி. இவர் நடிப்பில் வெளியான ‘பாகுபலி’ திரைப்படத்தின் மூலம் அதிகளவு பிரபலமடைந்தார். தமிழில் இவர் இஞ்சி இடுப்பழகி, எனை நோக்கி பாயும் தோட்டா, ஆரம்பம், பெங்களூர் நாட்கள் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகர் ராணா கடந்த ஆகஸ்ட் மாதம் தனது காதலியான மிஹீகா பஜாஜ் என்ற பெண் தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் நடிகை சமந்தா தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராணா தனக்கிருந்த உடல்நல பாதிப்பு பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார் . அதில் தனக்கு இதயத்தை சுற்றியுள்ள பகுதியில் அதிகளவு கல்சியம் சேர்ந்திருந்தது. இதனால் ரத்தக்கசிவு ,பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் இருந்தது . சிறுநீரகங்கள் செயலிழந்து விட்டது . மேலும் இறப்பதற்கான வாய்ப்பு 30% இருந்ததாக கண்கலங்கியபடி கூறியுள்ளார் .