Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை… முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

புயல் காரணமாக நாளை தமிழகம் முழுவதும் அரசு விடுமுறை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் புயல் தீவிரம் அதிகமாக இருப்பதால் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து கொண்டிருக்கிறது. புயல் நாளை மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே கரையை கடக்க உள்ளதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புயல் காரணமாக நாளை தமிழகம் முழுவதிலும் அரசு விடுமுறை விடப்படுகிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

மேலும் நிலைமைக்கு ஏற்றவாறு விடுமுறை நீட்டிக்கப்படுமா என்பது பற்றி அரசு முடிவு செய்யும். அத்தியாவசிய பணிகளில் உள்ள அரசு அலுவலர்கள் மற்றும் நாளை பணிபுரிவார்கள். தாழ்வான பகுதிகள் 4,133 இடங்களில் ஆட்சியர்கள் தனிக்கவனம் செலுத்த அறிவுறுத்தியுள்ளோம் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |