Categories
மாநில செய்திகள்

நிவர் புயல் – மக்‍களின் பாதுகாப்பு, நல்வாழ்வுக்காக பிரார்த்திக்‍கிறேன்

நிவர் புயல் பாதிப்பை எதிர்கொள்ள தமிழகம் மற்றும் புதுவைக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு முழுமையாக வழங்க என பிரதமர் மோடி உறுதி தெரிவித்துள்ளார் .

நிவர் புயல் நாளை மாலை காரைக்கால் மாமல்லபுரம் இடையே கரையை கடந்தால்  வட தமிழகத்தில் வழியாக தெலுங்கானா மாவட்டத்தின் வழியாக சென்று 26-ஆம் தேதி மும்பை பகுதிகளில் வலுவிழந்து விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிவர் புயலை ஒட்டி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதி கனமழை பெய்து வரும் நிலையில் நிலைமை குறித்து இரு மாநில முதல்வர்களிடம் தொலைபேசி மூலம் பிரதமர் மோதி கேட்டறிந்துள்ளார்.

அப்போது புயல் பாதிப்பை எதிர்கொள்ள தமிழகம் மற்றும் புதுவைக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு முழுமையாக வழங்கும் என அவர் உறுதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திரு. மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் மக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்விற்காக பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |