சென்னையை அடுத்த தாம்பரத்தில் மின்சாரம் தாக்கி இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாம்பரத்தை அடுத்த பீர்க்கன்காரணை பகுதியில் தையல் வேலை பார்த்து வந்தவர் கவுசல்யா இவரது வீட்டின் இரும்பு கதவில் மின்சார கம்பி அறுந்து உரசிக்கொண்டிருந்தது. இதனை அறியாத கௌசல்யா இரும்பு கதவை தொட்டபோது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்.
இதனையடுத்து ஆபத்தான நிலையில் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கௌசல்யா உயிரிழந்தார். மின்வாரியத்தின் அலட்சிய போக்கே இந்த விபத்துக்கு காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.