சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
நிவர் புயல் தாக்கம் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது. முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கி இருப்பதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாமல் நின்றன.
இதன் காரணமாக மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். சென்னையில் இன்று காலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. கிண்டி, கத்திபாரா மேம்பாலம் ஆளுநர் மாளிகை சாலை உள்ளிட்ட பகுதிகளில் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரிய விட்டபடியே செல்கின்றனர்.