சென்னை ஈசிஆர் சாலையில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் அரசு பேருந்து ஒன்று நகர முடியாமல் அங்கேயே நின்று உள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தாழ்வு மண்டலமாக மாறி தீவிர புயலாக உருவெடுத்து உள்ளது. இது நாளை மாமல்லபுரம் காரைக்கால் இடையே கரையை கடக்க இருப்பதால் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் புயல் கரையை கடக்கும் போது பலத்த காற்று வீசும். சுமார் 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய 7 மாவட்டங்களில் இன்று பிற்பகல் ஒரு மணி முதல் பேருந்துகள் நிறுத்தப்பட்டது. இதற்கிடையே புயல் காரணமாக மழையுடன் திடீர் பலத்த காற்று வீசியதால் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அரசு பேருந்து நகர முடியாமல் அங்கேயே நின்றது. சாலையை தெரியாத அளவுக்கு பனி மூட்டம் சூழ்ந்து இருப்பதால் பேருந்து அங்கிருந்து நகர முடியாமல் பயணிகள் அவதி அடைந்து வருகின்றது. இது சமூக வலைதளங்களில் பரவி வைரல் ஆகியுள்ளது.