நிவர் புயலின் தாக்கத்தால் டிஎன்பிசி கலந்தாய்வு தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நிவர் புயல் நாளை கரையைக் கடக்க உள்ள நிலையில் குரூப்-4 கலந்தாய்வு தள்ளி வைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிவர் புயல் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெற்று நாளை பிற்பகல் மகாலிங்கபுரம் காரைக்கால் இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்த வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டு வருகின்றன.
நவம்பர் 25 முதல் 26 தேதிகளில் நடைபெறவிருந்த சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட்டதாக டிஎன்பிசி நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் சான்றிதழ் சரிபார்ப்பு கலந்தாய்வு டிசம்பர் 8 மற்றும் 9 தேதிகளில் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி நிறுவனம் அறிவித்துள்ளது. இது சம்பந்தமாக குறுந்தகவல் மின்னஞ்சல் மூலம் அறிவிக்கப்படும் எனவும் டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார்.