நிவர் புயல் கரையை கடக்க இருக்கும் நிலையில் புதுச்சேரி கடற்கரையை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
நிவர் புயல் காரணமாக புதுச்சேரி கடற்கரை மூடப்பட்டிருக்கிறது. புதுச்சேரி கடற்கரையில் இருந்து பொதுமக்களை காவல்துறையினர் வெளியேறுகிறார்கள். வங்க கடலில் உருவான நிவர் புயல் தற்போது புதுச்சேரியில் இருந்து 380 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது. இதற்காக புதுச்சேரி கடற்கரை தற்போது மூடப்பட்டிருக்கிறது. நிவர் புயல் ஐந்து கிலோ மீட்டர் வேகத்தில் வந்து கொண்டிருக்கிறது.
இது புதுச்சேரிக்கும் – காரைக்காலுக்கும் இடையே கரையை கடக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. கரையை கடக்கும் நேரத்தில் 130 லிருந்து 145 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் சொல்லப்படுகிறது. இதற்கான பல்வேறு முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை தமிழக அரசும், புதுச்சேரி அரசும் எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி கடற்கரை மூடப்பட்டிருக்கிறது.