Categories
சற்றுமுன் பல்சுவை புதுச்சேரி மாநில செய்திகள் வானிலை

”380கி.மீ” தான் இருக்கு… வந்துகிட்டு இருக்கு…. யாரையும் வீடாதீங்க… சீல் வைக்க உத்தரவு …!!

நிவர் புயல் காரணமாக புதுவை கடற்கரை மூடி சீல் வைக்கப்பட்டு, மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். 

புதுச்சேரியில் இருந்து 380 கிலோ மீட்டர் தொலைவில் நிவர் புயல் மையம் கொண்டிருக்கும் நிலையில் புதுச்சேரியின் கடற்கரை பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. புதுச்சேரி கடற்கரை முழுவதும் மூடப்பட்டுள்ளது. எனவே புதுச்சேரி கடற்கரையில் உள்ள பொதுமக்கள் அனைவரும் இங்கு இருந்து அப்புறப்படுத்தபட்டு வருகின்றார்கள். மூன்று கிலோ மீட்டர் தூரம் உள்ள புதுச்சேரி கடற்கரையில் முழு பகுதியில் தற்போது போலீஸ் கட்டுப்பாட்டில் வந்துள்ளது.

இன்று இரவு 9 மணி முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வருகிறது. இதை தொடர்ந்து யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று புதுச்சேரி அரசு உத்தரவிட்டிருக்கிறது. இந்த நிலையில் தற்போது புதுச்சேரி கடற்கரை பகுதியில் கடல் சீற்றத்தை பார்ப்பதற்காக பொதுமக்கள் கடற்கரை வருவார்கள். ஆகவே அவர்கள் வரக்கூடாது மேலும், அவர்கள் உயிர்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்கான தற்போது புதுச்சேரி கடற்கரை முழுவதும் உஷார் படுத்தப்பட்டு இருக்கின்றது.

அதே போல வலுவிழந்து காணப்படும்  மரங்களையும் முறிக்கக் கூடிய வேலைகளில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றார்கள். நேரமாக நேரமாக காற்றின் வேகம் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. கடல் சீற்றம் அதிகரித்து காணப்படுகிறது. ஆகவே பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் மற்றும் அரக்கோணத்திலிருந்து வந்திருக்கக்கூடிய தேசிய பேரிடர் மீட்பு துறை அதிகாரிகள் அனைவரும்  அந்தப் பகுதியில் முகாமிட்டு இருக்கிறார்கள்.

Categories

Tech |