பன்னீர் ஃப்ரைடு ரைஸ் செய்ய தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி – 1 கப்
பன்னீர் – 50 கிராம்
பெரிய வெங்காயம் – 1
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
நறுக்கிய கேரட் – 3 மேஜைக்கரண்டி
நறுக்கிய பீன்ஸ் – 2 மேஜைக்கரண்டி
தண்ணீர் – 200 மில்லி லிட்டர்
உப்பு – தேவையான அளவு
மிளகுத்தூள் – தேவையான அளவு
எண்ணெய் – 3 மேஜைக்கரண்டி
முந்திரி – 3 .
செய்முறை:
முதலில் பன்னீர், பீன்ஸ், கேரட், முந்திரி, வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும். அதன் பின்பு பாத்திரத்தில் பாஸ்மதி அரிசியை போட்டு தண்ணீர் ஊற்றி உற வைத்து கொள்ளவும்.
பின்பு அடுப்பில் கடாயை வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும்,அதில் சிறு துண்டுகளாக நறுக்கிய பன்னீரைச் சேர்த்து பொன்னிறத்தில் பொரித்து எடுத்து கொள்ளவும்.
அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி, அதில் நறுக்கிய முந்திரியைபோட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து பனீருடன் வைக்கவும். பின்பு இஞ்சி பூண்டை எடுத்து மிக்சிஜாரில் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும்.
குக்கரை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெயை ஊற்றி, சிறுத் துண்டுகளாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கி, அதனுடன் இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து சிறிது கிளறிய உடன், பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், ஊற வைத்த அரிசியையும் சேர்த்து வதக்கவும்.
மேலும் அதனுடன் போதுமானஅளவு உப்பு, மிளகுத்தூள், பொரித்த பன்னீரை சேர்த்துப் பிரட்டி முடி வைத்து 2 விசில் வந்ததும் வேகவிட்டு இறக்கி பரிமாறினால் சுவையான பன்னீர் ஃப்ரைடு ரைஸ் ரெடி.