இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் மக்கள் அலட்சியமாக இருப்பதால் பிரதமர் மோடி வேதனை அடைவதாக தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு முதலில் உச்சத்தில் இருந்தது. அதனால் பொதுமக்கள் அனைவரும் அரசு விதித்த வழிமுறைகளை பின்பற்றி வந்தனர். தற்போது கொரோனாவுக்கு குணமடைந்து விகிதம் அதிகரித்து வருவதால் மக்கள் கொரோனாவை சாதாரணமாக எடுத்துக்கொண்டு செயல்பட்டு வருகிறார்கள். அது தனக்கு வேதனை அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மேலும் மக்கள் விழிப்புடன் இருப்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் கொரோனாவில் தடுப்பு நடவடிக்கைகளில் இந்தியா சிறந்த முறையில் உள்ளது என்றும் மத்திய மற்றும் மாநில அரசுகள் கூட்டு முயற்சியால் இறப்பு விகிதம் குறைகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.