கேரளாவில் இன்று புதிதாக 5420 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 5149 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் முதன்முதலாக கொரோனா பரவியது கேரளாவில்தான். அதேபோல் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு கொரோனாவை சிறந்த முறையில் கட்டுப்படுத்தியதும் கேரள மாநிலம்தான். ஆனால் 2-ம் கட்டமாக கேரளாவில் கொரோனா தொற்று மிகவும் வேகமாக பரவத்தொடங்கியுள்ளது. இன்று புதிதாக அம்மாநிலத்தில் 5420 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் 5149 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 24 பேர் உயிரிழந்ததால், கொரோனாவுக்கு இதுவரை 2095 பேர் உயிரிழந்துள்ளனர்.