இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ் மற்றும் ரத்தினகுமார் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ‘மாநகரம்’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இதன் பிறகு இவர் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘கைதி’ திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. தற்போது இவர் இயக்கத்தில் தளபதி விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம் தயாராகி அடுத்த வருடம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ் மற்றும் ரத்னகுமார் இருவரும் பாண்டிச்சேரி கடற்கரையில் எடுத்துக்கொண்ட புகைப்படம் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் புதுச்சேரி கச்சேரி… நிவர் புயலுடன் ஒரு செல்பி என பதிவிட்டு இந்த புகைப்படத்தை ரத்னகுமார் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.